ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு: இந்தியருக்கு தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றம்
லெஜண்ட் கிரிக்கெட் லீக் 2024இல், ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் மேலாளர் ஒருவருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்தது.
இழப்பீடு
மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன, குற்றம் சாட்டப்பட்ட யோனி படேலுக்கு 85 மில்லியன் ருபாய் அபராதம் விதித்து, முறைப்பாட்டளரான இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்காவுக்கு 2 மில்லியன் ருபாய் இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டார்.
முன்னதாக, லெஜண்ட் கிரிக்கெட் லீக் 2024 இன் அணி மேலாளரான யோனி படேலுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையில் வழக்கு தொடர்ந்தது, மேலும் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடியாணையை பிறப்பித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
