யாழின் முக்கிய பகுதிகளில் மாதா சொரூபங்கள் உடைப்பு(Photos)
யாழ். ஆனக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத விசமிகளால் ஏழு மாதா சொரூபங்கள் உடைக்கப்பட்டுள்ளன.
ஆனைக்கோட்டை பகுதியில் நேற்று(28.07.2023) இரவு ஆனைக்கோட்டை சந்தியில் ஒரு சொரூபமமும், ஆனைக்கோட்டை சந்திக்கு அருகாமையில் ஒரு சொரூபமும், ஆனைக்கோட்டை கராஜ்ஜடியில் ஒரு சொரூபமும், அடைக்லமாதா தேவாலயத்தை சுற்றி 3 சொரூபங்களும் மற்றும் ஆனைக்கோட்டை குடிமனைகளுக்கு மத்தியில் உள்ள ஒரு சொரூபமும் உடைக்கப்பட்டுள்ளன.
இதில் சில இடங்களில் சொரூபங்கள் உடைத்து செல்லப்பட்டுள்ளன. சில இடங்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
தீவிர விசாரணை
இந்நிலையில் சி.சி.ரி.வி காட்சிகளை அடிப்படையாக வைத்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் இது குறித்து தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்




Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
