பெருமளவில் குறைந்த மீன் விலைகள்- விலை குறையாத கோழி இறைச்சி
சந்தையில் மீன்களின் விலை ஏனைய நாட்களை விட பெருமளவில் குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலைகள்

இதனடிப்படையில் பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோ நெய் மீன் 2 ஆயிரம் ரூபாவுக்கும் ஒரு கிலோ சூரை மீன் 600 ரூபாவுக்கும் மற்றுமொரு வகை சூரை மீன் ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை தவிர ஒரு கிலோ கிராம் பாறை மீன் ஆயிரத்து 500 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் சாளை மீன் 350 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் உருளை மீன் 750 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் கானாங்கெளுத்தி மீன் 600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாதாரண சந்தையிலும் மீன்களின் விலைகள் ஏனைய நாட்களுடன் ஒப்பிடும் போது விலை குறைந்து காணப்பட்டதாக நுகர்வோர் கூறியுள்ளனர்.
கோழி இறைச்சியின் விலை குறையவில்லை

இதேவேளை, ஒரு கிலோ கோழி இறைச்சி இன்னும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஒரு கிலோ கிராம் 1450 முதல் 1600 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri