புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு: அஜித் பீ.திலகரத்ன
வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பீ.திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை

மருந்துப் பற்றாக்குறை காரணமாக புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளில் அதிகளவான நோயாளிகள் இக்கட்டான நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனால், புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை உள்ளன.
இதுவரை 15 மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்காததால், நோயாளிகள் அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகங்களில் அவற்றை வாங்க வேண்டியுள்ளது.
மருந்துகளின் விலை உயர்வு

அரச மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (என்எம்ஆர்ஏ) மருந்துகளின் விலையை அவ்வப்போது உயர்த்துவதால், மருந்துகளின் விலை கிட்டத்தட்ட 300வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இதன்படி, புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு குப்பியின் போன்ற மருந்துகளின் விலை 300,000 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் மருத்துவத் துறையின் மூலம் இந்த பற்றாக்குறை மருந்து வகைகளை
நிரப்புவதற்கான சரியான திகதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று அரசாங்க
மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பீ.திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam