அமெரிக்காவில் பட்டம் பெற்று இலங்கையில் பாரிய கொள்ளையில் ஈடுபடும் இளைஞன்
இலங்கையில் பாரிய கொள்ளைச் சம்பவங்களில் இடுபட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கணினி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவரே பல்வேறு திருட்டுக்களை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நாரஹேன்பிட்டி கித்துல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
25 கொள்ளைகள் மற்றும் 6 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையடித்துள்ளமையும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பல திறன் கைத்தொலைபேசிகள் மற்றும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து கைப்பைகளை கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan