மலையகத்தில் பல பகுதிகளில் டயர்கள் எரித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுப்பு (VIDEO)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சாலை மறியல் போராட்டம், ஒப்பாரி போராட்டம், பறை அடித்து முறையிடும் போராட்டம் என பல வடிவங்களில் இன்று போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர்.
தமது கோரிக்கையை அரசாங்கம் ஏற்காவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.
சில தோட்டங்களில் தொழிலாளர்கள் இன்று வேலைக்குச் செல்லாமல், தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மேலும் சில இடங்களில் 12 மணிக்குப் பிறகு போராட்டங்கள் இடம்பெற்றன.
பத்தனை சந்தியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தப்படித்து, ஒப்பாரி வைத்து, அரசு வீடு செல்ல வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, ஹைபொரஸ்ட், இராகலை, உடபுஸ்ஸலாவ, நானுஓயா, டயகம, லிந்துலை நாகசேனை, அட்டன், கொட்டகலை, நோர்வூட், டிக்கோயா, நோட்டன்பிரிட்ஜ் ஒஸ்போன், மஸ்கெலியா, சாமிமலை அப்கட், பொகவந்தலாவை, கினிகத்தேனை, வட்டவளை, நல்லதண்ணி, என மேலும் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்றன.
தலவாக்கலை நகரிலும் அரசாங்கத்தைப் பதவி விலக்கக்கோரி பாரியதொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.





அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri