போராட்டம் வெடிக்கும்! எல்லே குணவங்ச தேரரின் பகிரங்க எச்சரிக்கை
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முற்பட்டால் அதற்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும் என எல்லே குணவங்ச தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.
மொட்டுக் கட்சியினருக்கு நினைவுப்படுத்தப்படும் விடயம்
ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்காகவே 69 இலட்சம் பேர் வாக்களித்தனர் என்பதை மொட்டுக் கட்சியினர் மறந்துவிடக் கூடாது.
எனவே,13ஐ நடைமுறைப்படுத்த முற்பட்டால் அதற்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

தயாரிப்பாளர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு, அதனால் அவர் என்ன செய்துள்ளார் பாருங்க- வைரல் போட்டோ Cineulagam
