இணைய கடன் வழங்கலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்
இணையத்தில் வழங்கும் கடன் வசதிகளுக்கு எதிராக கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிக்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (06.11.2025) நடைபெற்றுள்ளது.
பொதுமக்கள் சக்தி அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அமைப்பின் தலைவர் சஞ்சய மாவத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“சட்டம் ஒன்று இல்லாத நாட்டின் அநீதி கோலோச்சும் என்பார்கள். கடன் வழங்குவதற்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்படாத நிறுவனங்கள் அதாவது மத்திய வங்கியில் பதிவு செய்யாத அமைப்புகள், நிறுவனங்கள் பதிவு அலுவலகத்தில் பதிவை மேற்கொண்டு இணையத்தினுடாக கடன் வழங்குகின்றன.
மத்திய வங்கி பதிவு இல்லை
மத்திய வங்கிக்கும் இவர்கள் பொறுப்புக் கூற தேவையில்லை. நிறுவனங்கள் பதிவு அலுவலகத்தில் தங்களின் வியாபார தன்மையை கூட குறிப்பிடுவதில்லை. ஆனால் கடன் வழங்குகின்றனர்.

எங்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பான குறித்த நிறுவனம் சொப்ட்வெயார் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது ஒன்லைன் கடன் வழங்கும் நிறுவனமாகும்.10,000 கடன் வாங்கியவர் அதன் வட்டியுடன் ஒரு இலட்சம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
கடன் செலுத்தவில்லை என்றால், அச்சுறுத்தல் மற்றும் கடன் பெற்றவர்களின் தொழில் இடங்களுக்கும் சென்று அவமானப்படுத்தல் மூலம் வசூலிப்பு செய்கின்றனர். இவற்றுக்கு அரசு உரிய சட்டத் திட்டங்களை கொண்டு வர வேண்டும். பொது மக்கள் இவ்வாறான கடன்களை பெற்றால் செலுத்த வேண்டாம்.
இவை சட்டத்திட்டங்களுக்குள் வராதவை. மேலும், உங்களுக்கு அச்சுறுத்தல் செய்தால் பொலிஸில் முறையிடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 4 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri