லண்டனில் நரேந்திர மோடிக்கு எதிராக பாரிய போராட்டம்!
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் வாழும் இந்திய மக்கள் நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் இருந்து நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு 'Resign Modi' என்ற பெரிய பேனரை பிடித்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1/ As dawn broke in London today, members of the diaspora and friends of India in the UK dropped a huge banner reading #ResignModi from Westminster Bridge. #indiaIndependenceday #IndependenceDayIndia #IndependenceDay2021 pic.twitter.com/sNfCs3OHRX
— SouthAsia Solidarity (@SAsiaSolidarity) August 15, 2021
இந்தியாவில் இன்று 75வது சுதந்திர தினம் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் உற்சாகத்துடன் நடைபெற்றுள்ளது.
கோவிட் அச்சம் காரணமாக பொதுமக்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் முக்கிய தலைவர்களின் பங்குப்பற்றலுடன் சிறப்பாக இடம்பெற்றுள்ளதுடன்,பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து மக்களிடம் சிறப்பு உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில்,லண்டன் வாழ் மக்கள் நரேந்திர மோடியை பதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.