கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி பெருந்தொகை பண மோசடி! யாழில் பெண்ணொருவரின் மோசமான செயல்
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி 99 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரிடம் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பெறப்பட்ட 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
குறித்த பெண் ஒருவரிடம் 55 இலட்சம் ரூபாவையும், மற்றவரிடம் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவையும் பெற்றுள்ளதாக மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
