பிரதி அமைச்சரின் பெயரில் நடக்கும் பாரிய மோசடி
பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தன்னுடைய முகநூல் பக்கத்தில் எச்சரிக்கை பதிவொன்றை இட்டுள்ளார்.
முறைப்பாடு செய்க
குறித்த மோசடியில் ஈடுபடும் நபர் பிரதி அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி, பல்வேறு தொலைபேசி எண்களின் ஊடாக பொதுமக்களையும், வணிக நடவடிக்கையில் ஈடுபடுபவர்களையும் ஏமாற்றி பாரியளவில் பணம் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி பணம், தனிப்பட்ட தரவுகள் அல்லது இரகசிய ஆவணங்கள் கோரப்பட்டால் எந்த வகையிலும் அவ்வாறான தகவல்கள் மற்றும் பணத்தினை வழங்கக் கூடாது என்று பிரதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அத்தகைய சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது கோரிக்கைகள் ஏதேனும் வந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam