நானோ நைட்ரஜன் இறக்குமதியில் பாரிய மோசடி! வெளியாகியுள்ள தகவல்
நானோ நைட்ரஜன் இறக்குமதியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
500 மிமீ அளவுள்ள நானோ நைட்ரஜன் பாட்டிலை 240 இந்திய ரூபாய்க்கு வாங்கலாம் என அவர்களின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட மொத்தப் பொருட்களுக்கு 387,000 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய பணம் அனைத்தும் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மோசடி செய்யப்பட்ட தொகை தோராயமாக 800 மில்லியன் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.