கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கிய பாரிய மீன்கள்: மகிழ்ச்சியில் கடற்தொழிலாளர்கள் (Photos)
மீன்பிடி தடை காலம் முடிந்து பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற கடற்தொழிலார்களின் வலையில் பாரிய மீன்கள் சிக்கியுள்ளன.
குறித்த பகுதியிலிருந்து நேற்று 90க்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான கடற்தொழிலாளர்கள் தென் கடலான மன்னார் - வளைகுடா கடல் பகுதிக்கு கடற்றொழிலுக்காகச் சென்றிருந்தனர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள்
கடற்தொழிலாளர்கள் அனைவரும் கடற்றொழில் முடித்துவிட்டு இன்று அதிகாலை மீன்களுடன் கரை திரும்பினார்கள்.
இவ்வாறு மீன் பிடித்துக் கரை திரும்பிய கடற்தொழிலாளர்களின் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதால் கடற்தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.
மீன்பிடி தடையால் கடந்த 60 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட தெற்குவாடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் கடற்தொழிலாளர்கள் பிடித்து வந்த மீன்களை இறக்கி எடைபோட்டு வியாபாரிகளிடம் வழங்குவதில் கடற்தொழிலாளர்கள் தீவிரம் காட்டினர்.
இதனால் தெற்குவாடி துறைமுக கடற்கரை கடற்தொழிலாளர்கள் கூட்டத்துடன் களை கட்டி காணப்பட்டது.



