டெல்லியில் பிரபல ஹோட்டலில் பயங்கர தீ விபத்து! 21 பேர் உயிரிழப்பு - 40க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்..!
தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 21 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹோட்டலுக்கும் பரவிய தீ
ஐந்து மாடிக்கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள ஹோட்டலின் உணவகத்தில், இன்று (03) காலை சுமார் 8.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு பின்னர், தீ அருகிலுள்ள மற்றொரு ஹோட்டலுக்கும் பரவியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர், அங்கு சிக்கியிருப்பவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் சிலிண்டர் வெடித்ததா அல்லது மின் கசிவா என்பது குறித்து டெல்லி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவ சிகிச்சைக்காக டெல்லிக்கு வந்த வெளிநாட்டினர் உட்பட 40க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அங்கு தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிவாரணம் அறிவிப்பு
தீ விபத்து ஏற்பட்டபோது ஹோட்டலில் இருந்த பெரும்பாலானோர் உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, டெல்லி தீ விபத்து மிகுந்த வேதனையை தருவதாகவும், விபத்து தொடர்பான விசாரணைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான காலத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோரின் குடும்பங்களுடன் நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam