டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து - விமான சேவைகள் நிறுத்தம்
பங்களாதேஷ் தலைநகரில் உள்ள டாக்கா ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது,
குறித்த விபத்தானது இன்று(18.10.2025) ஏற்பட்டுள்ளதுடன் இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்
உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக பங்களாதேஷ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAB) தெரிவித்துள்ளது.
விமான நிலைய அதிகாரிகள், தீயின் தீவிரத்தால் அனைத்து விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த விபத்து, விமான நிலையத்தின் செயல்பாட்டை முழுமையாக முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தீ விபத்திற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், ஐந்து நாட்களுக்குள் பங்களாதேஷில் நடக்கும் மூன்றாவது பெரிய தீ விபத்து இதுவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



