பாரிய நிதி முறைகேடு! சாணக்கியன் தொடர்பில் சி.ஜ.டிக்கு செல்லவுள்ள முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த மைதானத்தின் பெயரில் இரண்டு தடவை நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிஜடி யிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
அதன் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி எருவில் கிழக்கில் மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவலை பெற்றோம்.
இருந்தபோதும் அவ்வாறு இல்லாத மைதானத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம். இதன் பின்னர் இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் சட்டமூலம் தகவலை பெற்ற போது எருவில் தெற்கு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
எழுத்து மூலமாக தகவல்
இதில் முதலில் கிழக்கிலுள்ள மைதானத்துக்கு எனவும் பின்னர் இரண்டாவது முறை எருவில் தெற்கு மைதானத்துக்கு என எழுத்து மூலமாக தகவல் தந்தனர்.
இவ்வாறு முன்னுக்கு பின் முரணான தகவல் தரப்பட்டுள்ளது. அதேவேளை இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்துக்கு இரண்டு கோடி ரூபா ஒதுக்கப்பட்டதாக மாவட்ட செயலகம் தகவல் அறியும் சட்ட மூலமாக தெரிவித்திருந்தது.
அது தொடர்பான மேலதிக தகவலை கேட்டிருந்தபோது பிரதேச செயலாளர் அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்” என குறிப்பிட்டுள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)