நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு ஏற்பட்ட பாரிய நெருக்கடி! மனம் திறக்கும் முன்னாள் பிரதம நீதியரசர்
பாதுகாக்கப்பட்ட நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரிய தாக்குதல் ஏற்படுத்தப்பட்டது என முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்கவின் ஜனாதிபதி பதவி காலத்தை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் நான் மதிக்க கூடிய மிகவும் சொற்பளவிலான நபர்களில் முக்கியமானவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறப்பிடம் பெறுகின்றார்.
1993 ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உயர்நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாக செயற்பட்டேன். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு அவர் நீதித்துறைக்கு உயர்மட்ட நிலையினை வழங்கினார்.
நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க அவர் வழங்கிய ஒத்துழைப்பு அதனூடாக உறுதிப்படுத்தப்பட்டது. பாதுகாக்கப்பட்ட நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரிய தாக்குதல் ஏற்படுத்தப்பட்டது.
நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பல்வேறு செயற்திட்டங்கள் அக்காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன. நாட்டின் சட்டம், கல்வி,பொருளாதார அபிவிருத்திக் கொள்கைள் அனைத்தும் காலப்போக்கில் மாற்றியமைக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri