வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இலங்கை? நாளைய தினம் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி
இலங்கை பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை நாளை திருப்பி செலுத்தினால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடன் தவணையை செலுத்துவதற்காக உள்ள 500 மில்லியன் டொலரை, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கவே பயன்படுத்த வேண்டும். இதுவே தற்போது உள்ள ஒரு தீர்வு என வெரிடேஜ் ரிஸர்ச் நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்வது உட்பட பாரிய அளவு பிரச்சினைகள் நாட்டிற்குள் உள்ளன. அவை அனைத்தையும் தீர்ப்பதற்கு டொலர்களே தேவைப்படுகின்றது.
இந்த நிலையில் 500 மில்லியன் டொலர் நாட்டிற்கு வெளியே சென்றுவிட்டால் நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும். உரிய தரப்பினருடன் கலந்துரையாடி மீளச் செலுத்த வேண்டிய கடன் தவணையை மறுசீரமைப்பது மிகவும் பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்படியானால் நாளை செலுத்த வேண்டிய கடன் தவணையை செலுத்தாமல் இருந்தால் நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது எனவும் கலாநிதி நிஷாந்த மெல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பிச் செலுத்தப்படவுள்ள 500 மில்லியன் டொலர்கள் தற்போது துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களை மீட்பதற்காகப் பயன்படுத்தப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாமல் எப்படி ஜனாதிபதியாக முடியும்? - கோட்டாபய வழங்கிய உறுதி (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri