அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ரஷ்யா உக்ரைன் இடையே பாரிய மோதல்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறன.
இப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தரப்பு முயற்சித்து வரும் நிலையில் குறித்த தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்கு
இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் ட்ரோன்-ஏவுகணை தாக்கு தல்களை நடத்தியுள்ளது.
இதனால் மக்கள் நிலத்தடி சுரங்கப்பாதை நிலையங்ளில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் துருக்கியில் நடந்த நேரடி பேச்சு வார்த்தையின்போது ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புகொண்டன.
அதன்படி முதல் கட்டமாக கைதிகள் பரிமாற்றம் வடக்கு உக்ரைனில் உள்ள பெலாரஸ் எல்லையில் நடந்தது.
வார இறுதியில் மேலும் பலர் விடுவிக்கப்படுவார்கள். இது போரின் மிகப்பெரிய பரிமாற்றமாக மாறும் என நம்பப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
