கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது
கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் முற்றுகையிடப்பட்டுப் பல லீற்றர் கசிப்பு, கோடா, உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் குளத்தின் கரையோர பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே இன்று அதிகாலை 2.00 மணியளவில் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய இரண்டு குழந்தையின் தந்தையான பெரிய குளம் கட்டைக்காட்டைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் 14 பரல்களில் கசிப்பு உற்பத்திக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட 1620 லீற்றர் கோடாவையும் வடித்த நிலையில் காணப்பட்ட 120 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் பல பகுதிகளுக்கு கசிப்பை விநியோகித்து வந்தவர் என பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரையும் மீட்கப்பட்ட கோடா, கசிப்பு, உபகரணங்கள் என்பவற்றையும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க Cineulagam

நடிகரான பிறகு தனது கண்டக்டர் நண்பர்களை சந்தித்த ரஜினி! அப்போது எடுக்கப்பட்ட அரிதான போட்டோவை பார்த்துள்ளீர்களா Cineulagam
