தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1800 டொலர் என்ற வரம்பை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 டொலர்களை தாண்டக்கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
இதேவேளை, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தால் நாட்டின் தங்கத் தொழில் சரிந்துவிட்டதாக, தங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாம் கடுமையான சிக்கலில் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த தொழிலைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அரசாங்கத்தை கோரியுள்ளனர். நாட்டில் இன்று ஒரு பவுண்டு தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூரை சேர்ந்த திறமையானவர்கள் இந்த தொழில்துறையை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர்.
இதனால், தரமற்ற நகைகள் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan