மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பேரணியும் நிகழ்வும் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு
இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாது மாவட்டமாக உள்ள நிலையில் இன்றைய நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
"பேரழிவுகள் மற்றும் அவசர நிலைகளில் மனநல சேவைகளை அணுகலுக்கான ஆதரவு" எனும் தலைப்பில் இம்முறை உலக உளநல தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உளவள பிரிவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மாபெரும் விழிப்புணர்வு பேரணி
இந்த நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து உளவளத்தின் அவசியத்தினை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.











