கிளிநொச்சி டிப்போ சந்தியில் பாரிய விபத்து : இருவர் காயம்
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் நுழைந்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் மகிழுந்துடன் மோதியுள்ளது.
இதன்போது விபத்தில் சிக்குண்ட இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் மோதிய கனரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்ததுடன், முச்சக்கரவண்டி மற்றும் மகிழுந்து ஆகியனவும் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த 15ம் திகதி விபத்து இடம்பெற்ற பகுதியை அண்மித்துள்ள கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் முன்பாக பாதசாரி கடவையில் இவ்வாறானதொரு விபத்தின்போது பாடசாலை மாணவ ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொரு மாணவி படுகாயமடைந்திருந்தார்.
அதிகரித்த வேகம், நெரிசல் காரணமாக இவ்வாறான விபத்துக்கள் கிளிநொச்சியில் பதிவாகி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.





வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam