தென்னிலங்கையில் பொலிஸாரின் திடீர் சோதனையில் சிக்கிய மூன்று பெண்கள்
கடவத்தை, மஹர பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த தகாத நோக்கங்களுக்காக பயன்படுத்தும் விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹர நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் ஒன்றின் பேரில் கிரிபத்கொட பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும், 100,000 பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை
மேலும் இது தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை விசாரணைக்காக நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

அன்றைய தினம் ஒரு அரசாங்க சமூக நோய்கள் தொடர்பான வைத்தியர் முன்னிலையில் ஆஜராகுமாறும், சமூக நோய்கள் குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கரந்தெனியா, கைக்காவல மற்றும் திவுலபிட்டிய ஆகிய இடங்களைச் சேர்ந்த, 27 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.