கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய படுகொலைகள் - தாயின் கோபத்தால் மூன்று குழந்தைகள் பலி
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு தானும் குதித்த தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டதோடு, குழந்தைகள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
ஒரு குழந்தையின் சடலம் உடனடியாகமீட்கப்பட்டதோடு, இரண்டு குழந்தைகளின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றுக்குள் குதித்த தாயார் கிணற்றின் படிக்கற்களை பிடித்ததினால் உயிர்தப்பிக் கொண்டார்.
ஒரு பிள்ளையின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏனைய குழந்தைகளை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது கிணற்றுக்குள் இருப்பது நேற்று இரவு தெரியவந்த பின்னர் இன்று 04.03.2021 காலை 10.30மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ரி. சரவணராஜா அவர்களின் முன்னிலையில் கடற்படையின் உதவியுடன் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் மீட்க்கப்பட்டன.
ஒன்றரை வயதுடைய கிருபாகரன் டேனேஸ், ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா, எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா என்ற குழந்தைகளு பலிகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு தற்கொலைக்கு முயன்ற பெண் எழுதியதாக குறிப்பிடப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அதில் குடியும் அடியும் காரணமாக தன்னால் வாழ முடியாதுள்ளது. இன்று எனது பிறந்தநாள் நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இந்த குடிகாரனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.











