மருதோடை கந்தசாமி கோவில் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு
மருதோடை கந்தசாமி கோவில் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை மருதோடை பதியில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலிக்கும் மருதோடை கந்தசாமி கோவில் போரிற்கு பின்னர் தற்போது புனராவர்த்தனம் செய்யப்பட்டு மஹாகும்பாபிசேகம் நடைபெற உள்ளது.
அந்தவகையில் கும்பாபிஷேகத்தின் எண்ணைய்காப்பு சாத்தும் நிகழ்வு 08.06.2024 இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
வரலாற்றுத் தென்மை
இந்த நிகழ்வில் வவுனியா உள்ளிட்ட வடக்கு மாகணத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பெருமளவான பக்த்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
நீண்ட வரலாற்றுத் தென்மை கொண்ட கோயிலாகவும் கதிர்காமம் பாதயாத்திரை செல்லும் முருக பக்த்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் முருக தலமாகவும் காணப்படுவதுடன் பல புதுமைகள் நிகழ்த்தும் அற்புதம் நிறைந்த கோவில் சிறப்பான முறையில் புனரமைக்ககப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
07.06.2024 அன்று கர்மாரம்ப கிரியைகள் இடம்பெற்று, 08.06.2024 அன்று எண்ணைய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று, 09.06.2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து 15 நாட்கள் மண்டலாபிசேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |