வவுனியாவில் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மருத மரங்கள்
வவுனியா குளத்தின் ஆற்றுப்பகுதியில் நிற்கும் பழமையான மருத மரங்கள் இனம்தெரியாத குழுக்களால் வெட்டி கடத்தப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வவுனியா குளத்தில் இருந்து தாண்டிக்குளத்திற்கு செல்லும் ஆற்றின் கரைகளில் பழமையான மருத மரங்கள் அதிகளவில் நிற்கின்றது.
பூந்தோட்டம் வீதியூடாக குறுக்கறுத்துச் செல்லும் அந்த ஆற்றின் கரைகளில் நிற்கும் குறித்த மரங்கள் அண்மைய நாட்களாக இனம் தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்திச் செல்லப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
குறிப்பாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்திற்கு பின்புறமுள்ள பகுதியிலேயே இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. சொற்ப நாட்களில் 7 வரையான மரங்கள் அடியோடு அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, குறித்த சட்டவிரோத செயற்ப்பாட்டை உரிய திணைக்களங்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
