ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்ம நாபா மன்றத்தின் ஏற்பாட்டில் தியாகிகள் தின நிகழ்வு
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கோவிட் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மண்முனை மேற்குப் பிரதேச சபை உபதவிசாளர் பொன்னம்பலம் செல்லத்துரை மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் மத்தியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
1990.06.19ம் திகதியன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினத்தைத் தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்தி 1981ம் ஆண்டு தொடக்கம் மரணித்த அனைத்து தோழர்களையும் நினைவு கூர்ந்து இந்நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன் போது பத்மநாபா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்துச்
சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
