தியாகிகள் தின 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு(Photo)
தியாகிகள் தின 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(19) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர், மன்னார் நகர சபை உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
நினைவேந்தல்

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், TELO பொறுப்பாளர் மோகன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.யூட் குரூஸ் ஆகியோர் விசேடமாக கலந்துகொண்டு தியாகிகளின் உருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அஞ்சலி செலுத்தல்
இதன் போது கட்சியின் தோழர்கள், குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.


பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 23 மணி நேரம் முன்
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam