கல்பிட்டியில் சட்டத்தை மீறி 100 பேருடன் நடந்த திருமணம்
கல்பிட்டி, கந்தகுளிய கிராமத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் திருமணத்தை நடத்திய வீட்டிற்கு உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடிபோதையில் சட்டத்தை மீறி செயற்பட்ட மேலும் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கந்தகுளிய பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த திருமணத்திற்கு சுகாதார பிரிவிடம் அனுமதி கோரிய போது, அதற்கு வழங்கப்படாமையினால் இரவு 10 மணிக்கு பின்னர் இந்த திருமண விருந்து நடத்தப்பட்டுள்ளது. அதில் 100 பேர் வரையில் கலந்து கொண்டுள்ளனர்.
எனினும் திருமண நிகழ்விற்கு வந்த இளைஞர்கள் மதுபானம் அருந்தி, நடமாடி அதனை பேஸ்புக் லைவ் வீடியாவாக பதிவிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
