டக்ளஸ் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்! சபையில் கடுமையான வாக்குவாதம்(Video)
கட்டைக்காட்டு பகுதியில் நேற்று முன்தினம்(15.06.2023) இரவு கடற்படையினர் சரமாரியாக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே இவ்வாறு கடற்படையினர், கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, தம்மீது கடற்றொழிலாளர் ஒருவர் தாக்குதல் நடத்த முற்பட்ட வேலையை தான் தாக்குதல் நடத்தியதாக வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு பொறுப்பான கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சபையில் வாத பிரதிவாதங்கள்
இது தொடர்பாக சபையில் கலந்து கொண்டிருந்த மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவிய, பிரதேச மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் தேவனந்தா, கடற்படை மீது தாக்கல் நடத்த முற்பட்ட வேலை தாக்குதல் நடத்தியதாக தமது ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக அறிவித்தார்.
இது தொடர்பில் சபையில் வாத பிரதிவாதங்கள் கடுமையாக இடம்பெற்றது.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தாக்குதல் நடத்துவதற்கு கடற்படைக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்ததுடன் அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் அல்லது சந்தேகங்களை சட்டரீதியான நடவடிக்கைக்கு முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |














6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
