கிளிநொச்சியில் அதிக விலைக்கு விற்கப்படும் கடல் மீன்கள் ! (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் உணவுகளின் விலைகள் மிக மோசமாக அதிகரித்து காணப்படுகின்றமையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என எமது செய்தியாளர் தெரிவித்துளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் உணவுகளின் விலைகள் இன்றைய தினம் சடுதியாக அதிகரித்த நிலையில் காணப்பட்டது.
குறிப்பாக கிளிநொச்சி பொதுச்சந்தை பகுதியில் பெரிய மீன் வகைகள் ஒரு கிலோ 800 ரூபா முதல் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது அத்துடன் இறால் கனவாய் என்பனவும் 1200 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல சிறிய வகை மீன்கள் 400 தொடக்கம் 600 ரூபா வரைக்கும் விற்பனை
செய்யப்பட்டதை அவதானிக்க முடிந்தது கடல் உணவுகளின் விலை அதிகரிப்பால்
நுகர்வோர் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.








கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
