2010 இற்கு முன்னர் நடந்தது சுமந்திரனுக்கு தெரியாது! மஹிந்தவை பாராட்டியவர் சம்பந்தன்; பகிரங்க குற்றச்சாட்டு

Jaffna M.A.Sumanthiran Siththarththan
By Benat Sep 16, 2021 11:46 PM GMT
Report

யுத்தம் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவை பாராட்டியவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழ் அரசு கட்சி மட்டும்தான் மன்னிக்கப்பட்டு கூட்டமைப்பிற்குள் இணைக்கப்பட்டது. ஆனால், சுமந்திரன் மட்டும் இன்னும் மன்னிக்கப்படவில்லை. அவரை கொல்ல வந்ததாக கூறி, அவரது பெயரால் இன்றும் இளைஞர்கள் சிறையில் உள்ளனர் என   கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தரப்புக்கள் 3 கடிதங்கள் அனுப்பியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவற்றின் 5 கட்சிகள் கையெழுத்திட்டு ஒரு கடிதம் அனுப்பினோம். இரா.சம்பந்தன் ஒரு கடிதம் அனுப்பினார். இன்னொரு கடிதமும் அனுப்பப்பட்டது.

நாம் அனுப்பிய கடிதத்திற்கும்,  கூட்டமைப்பின் ஒற்றுமைக்குமிடையில் சம்பந்தமில்லை. இரா.சம்பந்தன் அதை கூறியுள்ளார். மற்றைய கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதனும், நானும் அதையே கூறியிருந்தோம்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆவேசத்திற்குத்தான் என்ன காரணமென்பது தெரியவில்லை. அவர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஆவேசமாக பேசியிருந்தார்.

இரா.சம்பந்தன் கடிதம் எழுதுவதை தெரிந்து கொண்டு, அதை மீறி நாம் கையெழுத்திட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால், உண்மையில் அப்படி நடக்கவில்லை. நாங்கள் கையெழுத்திட வேண்டிய ஒரு கடிதமெனில், அதை எழுத தொடங்கும் போதே இரா.சம்பந்தன் எமக்கு தகவல் தந்து விடுவார்.

ஆனால் இந்த கடித விவகாரத்தில் கடைசிவரை எனக்கு ஒரு தகவலும் தரப்படவில்லை. எம்மை துரோகிகள், காட்டிக் கொடுத்தவர்கள் என்றும் சுமந்திரன் கூறியிருந்தார்.

தமிழ் அரசு கட்சியினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் தேர்தல் காலத்தில் மேடை போட்டு இவற்றைத்தான் கதைத்துக் கொண்டிருப்பார்கள். எனக்கு மக்கள் மத்தியிலிருந்த மதிப்பையும், செல்வாக்கையும் குழப்ப அதை செய்தார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அது பலனளிக்காது என்பதை தெரிந்ததால் நான் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன்.

ஆனால் இப்பொழுதும் சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் மீண்டும் புலிகளின் போர்க்குற்றம் பற்றியும், புளொட் அமைப்பும் விசாரிக்கப்பட வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள். சுமந்திரன் தயாரித்த கடிதத்தில், தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட பகுதி இணைக்கப்பட்டுள்ளது. அது அவர்களின் நிலைப்பாடு. அது வேறு விடயம்.

ஆனால் நாங்கள் தமிழ் தரப்பாக இருந்து கொண்டு, நாங்களே எங்களை விசாரிக்க கோருவது எவ்வளவு புத்திசாலித்தனம் என தெரியவில்லை.

அடுத்தது, நாங்களே விசாரிக்க கோருவது, நாங்கள் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டோம் என நாங்களே ஒத்துக் கொள்வதை போல அமையும். எல்லா இயக்கங்களிற்கிடையிலும் ஒருவருக்கொருவர் பல பிரச்சனைகள் இருந்தன. மோதல்களும் நடந்தன. அது உண்மை.

அதற்காக எந்த சந்தர்ப்பத்திலும், புலிகளை விசாரியுங்கள் என கூற தயாராக இல்லை. எங்களை விசாரிப்பதென ஒரு நிலை வந்தால், அதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

ஒரு சர்வதேச விசாரணை நடத்த நாம் தயாராக இருக்கிறோம். அப்படியொன்று நடந்தால்தான், நாம் எந்தவித குற்றங்களும் செய்யவில்லையென்பதை நிரூபிக்க முடியும். நாம் சர்வதேச விசாரணையை கோர மாட்டோம் என சுமந்திரன் கூறியிருந்தார். அவருக்கு தெரியாது, நாம் ஏற்கனவே பலமுறை அதை கோரி விட்டோம்.

1994களின் பின் பேசும்போது, பலமுறை கூறியிருக்கிறேன்- விடுதலைப்புலிகளுடன் எமக்கு பிரச்சனைகள் இருந்தாலும், பேச்சுவார்த்தையென வந்தால், அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டுமென கூறியிருந்தேன். ஏனெனில், அவர்கள் இல்லாத தீர்வு முழுமையடையாது.

எங்களுடன் பேசாவிட்டாலும், புலிகளுடன் பேசி ஒரு தீர்வை நடைமுறைப்படுத்தினால் எமக்கும் அதில் பிரச்சனையிராது என கூறியிருந்தேன். ஏனெனில், புலிகள் மிகப்பெரியளவிலான அதிகார பரவலாக்கலையே கோருவார்கள்.

சுமந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூறியிருக்கிறார்கள், கே.பி, கருணா, பிள்ளையான் போல புளொட்டையும் விசாரிக்க வேண்டுமென. கே.பி, கருணா, பிள்ளையான் ஆகியோர் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேறிய பின்னர் நடந்தவற்றிற்கு இவர்கள் விசாரணை கோரவில்லை.

அவர்கள் புலிகள் அமைப்பில் இருந்த போது செயற்பட்டமைக்கே இப்பொழுது இருவரும் விசாரணை கோருகிறார்கள். கே.பி யுத்தம் முடிந்த பின்னர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர். அவர் அதன் பின்னர் இலங்கையில் கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் இருக்கிறார்.

அவருக்கு பாதுகாப்பாக 10-15 இராணுவச்சிப்பாய்கள் உள்ளனர். அவரை விசாரிப்பதெனில் முழுக்க முழுக்க அவர் விடுதலைப் புலிகள் காலத்தில் செயற்பட்டமைக்காகவே விசாரிக்க வேண்டும். இதில் இன்னொரு விடயமுள்ளது. அவரை விசாரிப்பதெனில், அவருடன் செயற்பட்ட ஏராளம் புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர்.

இந்த விசாரணை வலைப்பின்னல் பெரிதாகிக் கொண்டே போகும். இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒத்ததாகவே இவர்களின் கோரிக்கை உள்ளது.

சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் கூறியதற்கு பின்னர், இப்பொழுது வாசுதேவவும், புலிகள் மீது விசாரணை நடத்த வேண்டுமென கூறியுள்ளார்.

என்னை விசாரிக்க வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதில் ஒரு நியாயம் உள்ளது. அவரிடம் எங்களைப்பற்றிய ஒரு ஆதாரமுள்ளது. அவரது தந்தையார் குமார் பொன்னம்பலம் எம்மை தொடர்பு கொண்டு, எந்த தரப்பாலோ தமக்கு உயிராபத்து உள்ளது, அதனால் எமது அங்கத்தவர்கள் சிலரை அனுப்பி தமது வீட்டுக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டிருந்தார்.

எங்கள் அங்கத்தவர்கள் அவர்களது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அப்பொழுது சின்னப்பொடியனாக அதையெல்லாம் பார்த்து வளர்ந்தவர் கஜேந்திரகுமார். தனது தந்தையுடன் சேர்ந்து இவர்கள் சட்டவிரோதமாக ஏதோ செய்கிறார்கள் என அப்போது அவருக்கு விளங்கியிருக்கவில்லை, இப்பொழுது விளங்கி, விசாரணை கோருகிறார் என நினக்கிறேன்.

இவர்கள் இருவரும் இப்பொழுது ஏன் இவற்றை கதைக்கிறார்கள் என தெரியவில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.  இராணுவத்தின் இறுதி யுத்த வெற்றியில் பங்கு கொண்டாடியவர் சித்தார்த்தன் என. இதை எழுதியவருக்கோ, சுமந்திரனுக்கோ தெரிந்திருக்குமோ இல்லையோ, யுத்தம் முடிந்த பின்னர் இரா.சம்பந்தன் இரண்டு விடயங்கள் சொல்லியிருக்கிறார்.

முதலாவது, மஹிந்த ராஜபக்சவை பாராளுமன்றத்தில் வைத்து பாராட்டினார். பயங்கரவாதத்தை நீங்கள் கட்டுப்படுத்தி மக்களை விடுவித்திருக்கிறீர்கள். நன்றி என. அப்போது சிங்கள எம்.பிக்கள் மேசையில் தட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதை சம்பந்தன் மேல் குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை.

இவையெல்லாம் 2010 இற்கு முன்னர் நடந்த விடயங்கள். சுமந்திரன் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் நடந்தவை. அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் 2010 இற்கு முன்னர் நடந்தவற்றை பேசுவது பிரச்சினையில்லை. அவற்றை படித்து, அறிந்து விட்டு பேசுவதே நல்லது.

எம்மை தூண்டி விடுவதற்கே இந்த குற்றச்சாட்டுக்களை இவர்கள் தெரிவிக்கிறார்கள். நாம் இதற்கு சரியாக பதில் சொல்ல முயன்றால், அந்த பதில்கள் எமக்கு எதிராக மட்டுமல்ல, புலிகளிற்கு எதிராகவும் அவை பயன்படுத்தப்படும்.

ஆகவேதான் எங்களை தூண்டிவிட இருவரும் முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகமும் எனக்குண்டு. எங்களை மன்னித்துத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்ததாக சுமந்திரன் கூறியிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடங்கிய போது சுமந்திரன் இருக்கவில்லை. ஆகவே அவர் மன்னிக்க வேண்டிய தேவையொன்று கிடையாது.

ஆனால், இரா.சம்பந்தன் சொல்லியிருக்கிறார்- தான் விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்ததாக. கொலைப்பட்டியலில் இருப்பவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள்தான் மன்னிக்கப்படுவார்கள். இயக்கங்களை பொறுத்தவரை நாம் மோதலில்  ஈடுபட்டோம். பின்னர் சமாதானமாகினோம். அங்கு ஒருவரையொருவர் மன்னிப்பதல்ல. இதுதான் நடந்த விடயம். இவையெல்லாம் சுமந்திரனிற்கு தெரியாமலிருக்கலாம்.

உண்மையில் தமிழ் அரசு கட்சிதான் மன்னிக்கப்பட்டது. இதேவேளை, சுமந்திரன் இன்றுவரை மன்னிக்கப்படவில்லை. சுமந்திரனிற்கு குண்டுத்தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி, சுமந்திரனின் பெயராலேயே இளைஞர்கள் இன்றும் சிறைகளில் உள்ளனர்.

சுமந்திரனின் பாசையில் சொல்வதென்றால், சுமந்திரன் காட்டிக் கொடுத்த இன்றும் இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். இதுதான் உண்மை.

அந்த நேரத்தில் அரசியலில் இருந்தவர்களிற்கு, விடயமறிந்தவர்களிற்கு எமக்கும், புலிகளிற்கும், ஆயுத இயக்கங்களிற்கிடையில் மோதலில் என்ன நடந்ததென்பது. இது தெரியாமல் மக்களில்லை.

இவர்கள் எத்தனை தரம் திரும்பித்திரும்பி சொன்னாலும், ஆயுத இயக்கங்களை குறைகூறுவதில் பயனில்லையென்பது நன்றாக தெரியும் என  குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, ஹனோவெர், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mülheim, Germany

05 Jan, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

31 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வத்தளை

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இயக்கச்சி

04 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

02 Jan, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சாவகச்சேரி, துணுக்காய், சென்னை, India

05 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Hamm, Germany

13 Jan, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
மரண அறிவித்தல்

அச்செழு, England, United Kingdom

27 Dec, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, மானிப்பாய், London, United Kingdom

31 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

01 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Mississauga, Canada

29 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், பிரித்தானியா, United Kingdom

01 Jan, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Dec, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Vaughan, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

அல்லாரை, சுவிஸ், Switzerland, London, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வட்டக்கச்சி, யாழ்ப்பாணம், Brompton, Canada, திருநெல்வேலி கிழக்கு

28 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், ருலூசெ, France

01 Jan, 2011
மரண அறிவித்தல்

முள்ளியவளை, கரைச்சிக்குடியிருப்பு, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, சுதுமலை கிழக்கு

30 Dec, 2013
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Bobigny, France

27 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

29 Dec, 2020
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US