இலங்கையில் தற்போது கோவிட் தொற்றிய பலர் குறித்து வெளிவந்த தகவல்
கோவிட் தொற்றுக்கு உள்ளாகி தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைகள் (பொது சுகாதாரம்) பணிப்பாளர் சிறப்பு மருத்துவ நிபுணர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனால், அனைவரும் மூன்று கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் தற்போது பரவி வரும் ஒமிக்ரோன் உருமாறிய வைரஸ் திரிபு மிகவும் வீரியமானது.
எனினும் கடுமையாக நோய் அறிகுறிகள் தென்படாது. தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றும் வாய்ப்புகள் அதிகம். மூன்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதவர்களே தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் இறந்தும் போகலாம். தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் தப்பியுள்ளனர். இவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றினாலும் பாதிப்பு ஏற்படாது.
அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுங்கள். பொய்யான நிலைப்பாடுகளுக்கு சிக்கிக்கொள்ளாதீர்கள் எனவும் சுசி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam