தலிபான்களின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தால் பறிபோன பல உயிர்கள்! செய்திகளின் தொகுப்பு
தாம் வென்றுவிட்டதாக எண்ணி உற்சாகத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் தலிபான்கள் சுட்டதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான்கள், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சி படைக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதனை அம்ருல்லா சாலே மறுத்துள்ளார். பின்னர் தலிபான் தலைவர்களும் இந்த தகவலை மறுத்தனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
