முன்னாள் எம்பி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவிப்பு
இலங்கை அரசியலில் நீண்டகாலம் தனித்துவமான அரசியல் பயணத்தை முன்னெடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் தேசியத்தின் உறுதியான கொள்கையை எப்போதுமே விடாப்பிடியாக தன் இதயத்தில் சுமந்து பல அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள், படையினரின் விசாரணைகள் என பலவிதமான ஆபத்துக்களை எல்லாம் எதிர்கொண்டு ஈழமண் விடுதலைக்காக அற்பணிப்புடன் உழைத்த ஒரு பெருமகனை நாம் இழந்துள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - ருசாத்
தமிழீழ விடுதலைக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
செய்தி - எரிமலை
இரங்கல் செய்திகள்..
தமிழ்த்தேசிய அரசியலில் கொண்ட கொள்கையில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தனது இறுதி மூச்சுவரை தடம்மாறாது பயணித்த தமிழ்த்தேசிய பற்றாளன் எம் கே சிவாஜிலிங்கம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
செய்தி - திலீபன்

மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்குக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
செய்தி - ராகேஷ்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி யாழ்ப்பாணம் வாழ் முஸ்லிம் மக்களும் தமது ஆழ்ந்த கவலையையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
செய்தி - பாறுக் ஷிஹான்
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பதிவு செய்த அரசியல் தலைவர் தேசப்பற்றாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவு ஆழ்ந்த துயரத்தையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - தீபன்