இயல்பு நிலைக்கு திரும்பிய நாட்டின் பல பகுதிகள்
நாட்டில் கடந்த பல நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நேற்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பல பகுதிகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
மன்னார்
மன்னாரில் நேற்று காலை முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு, பொது போக்குவரத்து சேவைகளும் இயல்பு நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் அங்கு மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதால் மக்கள் வெளி நடமாட்டங்களை அதிகம் தவிர்த்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய போக்குவரத்து சேவைகள் வழமை போல் இடம்பெறுவதுடன், சுகாதார நடைமுறைகளும் இறுக்கமாக பின் பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டமும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் அதேவேளை மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன.