சமூகத்திற்குள் மூன்று மடங்கு கோவிட் தொற்றாளர்கள்..? அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களை விடவும், மூன்று மடங்கு கொரோனாதொற்றாளர்கள் சமூகத்திற்குள் இருக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சமூகத்திற்குள் காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களின் ஊடாக, மேலும் வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் 3500ற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சமூகத்திற்குள் அதைவிடவும் மூன்று மடங்கு தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என அவர் கூறுகின்றார். இவ்வாறானவர்களின் ஊடாக, சமூகத்திற்குள் கோவிட் தொற்று மேலும் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் அச்சம் வெளியிடுகின்றார்.
புதிய மரபணு ஊடாக இதுவரையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஒன்றை காண முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் பரவலை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்கள் இரண்டு வாரங்களாவது வீட்டினுள் இருந்து செயற்பட வேண்டும். தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் ஒன்றை இரட்டை இலக்கங்களில் வீட்டை விட்டு செல்லுமாறு கூறினாலும் மக்கள் அதிகமாக வெளியே செல்கின்றனர்.
வீதிகள் வெறுமையாக வேண்டும்.
தொற்றினை குறைக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே இருக்க வேண்டும் அத்தியாவசிய விடயங்ககைள தவிர்த்து வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
