மட்டக்களப்பில் தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா, வேலூர், கூழாவடி, மாமாங்கம், குமாரபுரம், புன்னைச்சோலை, இருதயபுரம், கறுவப்பங்கேணி, பாரதி வீதி, எல்லை வீதி உட்படப் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பலர் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதைக் காணமுடிகின்றது.
இதேநேரம் படுவான்கரையின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப்பரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது










முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
