விடுதியில் நடந்த மூன்று கொலைகள்: மனுஷவின் நெருங்கிய சகா கைது
முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றி தவலம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி ஹினிதும மஹாபோதிவத்த பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நடந்த மூன்று கொலைகள் தொடர்பிலேயே சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 30 அன்று இரவு 11.15 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில், விடுதியின் உரிமையாளர் மற்றும் 34, 39ஆகிய இருவர் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான நிதி பரிவர்த்தனை இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட விடுதியின் உரிமையாளர் மற்றும் ஏனைய இருவரும் முறையே 1.5 மில்லியன் மற்றும்1.3 மில்லியன் ரூபா பணத்தை வெளிநாடு செல்லும் நோக்கத்தோடு, பிரியந்த ஜெயதிலகவுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி இந்தத் தாக்குதலின் போது, டி-56 துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதலை மேற்கொண்டதாகவும்,சம்பவம் நடந்த இடத்திலிருந்து 28 டி-56 தோட்டா உறைகளை பொலிஸார் மீட்டதாகவும் கூறப்படுகிறது.
நடத்தப்பட்டதாக விசாரணை
கரந்தெனிய சுத்தா என்ற வெளிநாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உத்தரவின் பேரில் நெவில் என்ற நபரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட திசாரா விருந்தினர் மாளிகையின் உரிமையாளர் இந்துனில் சமன் குமார மற்றும் கைது செய்யப்பட்ட பிரியந்த ஜெயதிலக இருவரும் முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |