டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை : மனுஷ நாணயக்கார உறுதி
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்தவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தொழில் மற்றும் வெளிட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நேற்று முன் தினம்(23.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியள்ளார்.
வெளிநாட்டு வெளிவாய்ப்புத் துறை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இந்த செயற்பாடு மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை கடத்தல்காரர்கள் மற்றும் மோசடியாளர்களின் பிடியில் இருந்து பாதுகாக்க முடியும்.
அத்துடன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதோடு, குறைகளைக் கையாளும் நடைமுறைகளையும் மேம்படுத்தும்.
இந்த முயற்சி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தேவையற்ற தலையீடுகளை முறியடிப்பதற்கும், சட்டவிரோத நடவடிக்கைகளை திறம்பட எதிர்த்து செயற்படுத்துவதற்கும் அதிகாரம் அளிக்கும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை டிஜிட்டல் மயமாக்கப்படும்போது, அது தூதரகத்தில் உள்ள விவகாரங்கள், பணியாளர்கள் மற்றும் SLBFE ஆட்சேர்ப்பு வரை அனைத்தையும் உள்ளடக்கும்.
அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தொலைபேசியிலும் ஒரு 'செயலி ' இருக்கும். அதணூடக அவர் சுகயீனம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் நிலையில் இருக்கும்போது எமது தூதரகத்தில் உள்ள SLBFE பணியாக அதிகாரிகளுடன் தொடர்புகளை எற்படுத்த முடியும்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக தொடர்பு கொள்ளும் அமைப்பை உருவாக்கி உள்ளோம். இதனால் இத்துறையில் உள்ள பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
தற்போதைய சட்டத்தின்படி, உப முகவர்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை.
உப முகவர்களை கையாள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டம் திருத்தப்பட்டு தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனவே அது விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
