மனுஸ நாணயக்காரவுக்கு எதிராக சபாநாயகரிடம் முறைப்பாடு: கோப் குழு தீர்மானம்
நாடாளுமன்றின் பொது நிறுவனங்கள் தொடர்பான கோப் குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்களை விமர்சித்ததால் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஸ நாணயக்காரவுக்கு எதிராக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானித்துள்ளது.
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் விடுத்துள்ள அறிக்கை
கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி அமைச்சர் மனுஸ நாணயக்கார, தேசிய நிகழ்வொன்றின் போது கோப் அமைப்பின் அதிகாரங்கள் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் பணிகளுக்கு சவால் விடுத்ததாக இலங்கை நாடாளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரின் கருத்து, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும், அத்தகைய
கருத்து ஒட்டுமொத்த கோப் குழுவிற்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் கோப் குழு
குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
