ஜனாதிபதி தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவித்த மனோ கணேசன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தனது ஆதரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் (06.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தனது இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
மேலும், சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கவுள்ளதாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் திகதி
இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ச, நுவன் போப்பகே, கீர்த்திரத்ன உட்பட பலர் போட்டியிடவுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam