சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் வந்த பின்னரே உண்மையான வெளிச்சம் வரும்! மனோ கணேசன்
என்ன தான் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் கூட சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் வந்த பின்னர் தான் உண்மையான வெளிச்சம் வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், இருட்டு அறைக்குள் வெளிச்சம் வந்த பின்னர் தான் என்ன நடக்கிறது என்பது எமக்கு புரியவரும். அது புரியவந்தால் தான் உண்மையான கணக்குவழக்குகளை நாம் திட்டமிடலாம்.
ஆகவே மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வேலையாக தான் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இருக்கிறது.
21ஆம் திகதியுடன் இந்த வரவு செலவுத் திட்டத்தை முடித்துக் கொண்டால் ஞாயமானது என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.