மலையகத் தமிழர் குறித்து இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் மனோ கணேசன் கோரிக்கை (Photos)

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lanka India
By Renuka Feb 13, 2023 12:01 PM GMT
Report

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை வருகை தந்த இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கும், இலங்கை அரசியல் சமூக தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இந்திய தூதரகத்தில் நேற்றைய தினம் (12.02.2023) நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு பேசும்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மலையகத் தமிழர் குறித்து இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் மனோ கணேசன் கோரிக்கை (Photos) | Mano Ganesan Request

இது தொடர்பில் மேலும் அவர் கூறியதாவது,

இந்தியாவை எந்தக் கட்சி ஆள்கிறது என்பது இந்திய உள்விவகாரம். அதில் நாம் தலையிடோம். இப்போது ஆள்கின்ற கட்சி உங்கள் பாரதிய ஜனதா கட்சி.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக கிளை தலைவர் கே. அண்ணாமலை ஆகிய நீங்கள் இருவரும் உங்கள் கட்சியின் இரண்டு பிரதான ஆளுமைகள்.

உங்கள் கட்சி, அரசாங்கம் சார்பில் நீங்கள் இருவரும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும். தொப்புள் கொடி உறவுகளான எம் மீது, இந்தியாவின் குறிப்பாக இந்திய மத்திய அரசாட்சி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அக்கறை இன்னமும் கணிசமாக அதிகரிக்க வேண்டும்.

தென் தமிழக மாவட்டங்களான திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து சரியாக 1823ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்டு, இன்றைய 2023இல் 200 ஆண்டுகளை இலங்கையில் நிறைவு செய்யும் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் உங்கள் அரசும், நாடும் மிக அதிக அக்கறையை கொள்ள வேண்டும் என நான் கோருகிறேன்.

1964ஆம் ஆண்டின் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் எம்மை இந்நாட்டில் பலவீனப்படுத்தி விட்டது. இந்த ஒப்பந்தம் நடைபெற்று, நமது மக்கள் நாடு கடத்தப்பட்டு இருக்காவிட்டால், இன்று இலங்கை நாடாளுன்றத்தில் சுமார் 25 மலையக தமிழ் எம்பிக்கள் இருந்திருப்போம். வடகிழக்கு தமிழ் எம்பிகளுடன் சேர்த்து சுமார் 50 தமிழ் எம்பிக்கள் அரசியல் பலத்துடன் இலங்கையில் இருந்திருக்க வேண்டிய நிலைமையை சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் இல்லாமல் செய்து விட்டது.

மலையகத் தமிழர் குறித்து இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் மனோ கணேசன் கோரிக்கை (Photos) | Mano Ganesan Request

முழு குடியுரிமை வழங்க வேண்டும்

அந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் எஞ்சியவர்களுக்கு இலங்கை முழு குடியுரிமை வழங்க வேண்டும். இன்று சட்டப்படி குடியுரிமை இருக்கிறது. ஆனால், காணி, கல்வி, வீட்டு, சுகாதார உரிமைகள் இந்நாட்டின் ஏனைய குடிமக்களுக்கு சமானமாக எமது மக்களுக்கு இல்லை. ஆகவே, முழு குடியுரிமை இல்லை. இதற்காகவே நாம் ஜனநாயக ரீதியாக இலங்கைக்கு உள்ளே போராடுகிறோம். இதை இலங்கை அரசுக்கு ஞாபகப்படுத்தி பெற்று தர வேண்டிய கடப்பாடு இந்திய அரசுக்கு இருக்கிறது.

எங்கள் மக்கள் எழுச்சி அடைய முதல் தேவை, கல்வி எழுச்சியே. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை இடைநிலை, கபொத சா/த. உ/த, வகுப்புகளில் எமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியில் போதிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இதற்காக உங்கள் நாட்டு ஆசிரியர்கள் இங்கே வந்து எமது பாடசாலைகளில் கற்பிப்பதை இந்நாட்டு ஆசிரிய தொழில் சட்டங்கள் ஏற்காது.

மலையகத் தமிழர் குறித்து இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் மனோ கணேசன் கோரிக்கை (Photos) | Mano Ganesan Request

நமது ஆசிரிய பணி விண்ணப்பதாரிகளை நாம் இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம். ஆகவே, ஒரே வழி, எமது மக்களுக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டத்தின் அடிப்படையில், இங்கே ஆசிரிய பயிற்சிகளை நடத்த கலாசாலை அமைத்து, அதற்கு தமிழகத்தில் இருந்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் பாட ஆசிரிய பயிற்சிகளை வழங்க பயிற்சியாளர்களை அனுப்புவதாகும்.

இந்த திட்டத்தை உங்கள் அரசு உடன் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதற்கான உள்நாட்டு அனுமதிகளை, கட்டமைப்புகளை இலங்கை ஜனாதிபதியுடன் பேசி நாம் செய்து தருவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பில் இந்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோருடன், இந்தியத் தூதுவர் கோபால் பாகலே, அமைச்சர் ஜீவன் தொண்டமான், எம்பி ரிசாத் பதுர்தீன், இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், கோபியோ இலங்கை கிளை தலைவர் குமர் நடேசன், வர்த்தகர் கோபால்சாமி ஆகியோரும் கலந்துகொண்ட இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்த கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US