அடுத்த மாதம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்! மனோ கணேசன்
பசிலின் அலாவுதீன் விளக்கு வேலை செய்தால் அடுத்த மாதம் பொருட்களின் விலைகள் குறையும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதத்திற்கு இன்னும் 2 நாட்கள் தானே உள்ளன, பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
எப்படி அடுத்த மாதம் திடீரென விலைகள் குறையும்? குறைந்தால் நல்லம். பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) வரும் போது அலாவுதீனின் விளக்கை கொண்டு வந்ததாக கூறினார். அந்த விளக்கு எரியாமல் உள்ளது. அதுதான் பிரச்சினை! அவருடைய அந்த விளக்கு உடைந்து விட்டது.
இல்லையென்றால் அந்த விளக்கிற்கு ஏதாவது நடந்துவிட்டது. அது வேலை செய்தல் அடுத்த மாதம் பொருட்களின் விலைகள் குறையும். நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த மாதத்திற்கு இன்னும் 2 நாட்கள் தானே உள்ளன. ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம்.
அமைச்சர்கள் ஊடகங்கள் முன் வந்து பொருட்களின் விலை கூடி விட்டது தானே? எமக்கு தெரியும்! எமக்கும் கவலை தான்! என்று கூறி பயன் இல்லை. நீங்கள் தான் அரசாங்கம். நாங்கள் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சி.
உங்களுக்கு தான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கான பொறுப்பை நீங்கள் தான் செய்ய வேண்டும். அதை செய்யாமல் ஊடகங்கள் முன் வந்து பொருட்களின் விலைகள் கூடிவிட்டது தானே?
மக்களுக்கு பிரச்சினை தானே? என்று கூறி எந்த பிரயோசனமும் இல்லை. அப்படி பேச வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri