காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு! கருப்பு துணி கட்டி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் (PHOTOS)
தனுஷ்கோடியில் கடலில் காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று பாம்பன் நாட்டுபடகு மீனவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளர்.
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலில் மிதக்கும் காற்றாலை அமைக்க இந்திய, தமிழ் நாடு அரசு சார்பாக ரூபாய் 350 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அறிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழியும் ஆபத்து
இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடலில் மிதக்கும் காற்றாலை அமைத்தால் பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியாக உள்ளதால் அறிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசுவை, கடல் குதிரை உள்ளிட்டவை அழியும் உயிரிழக்கக்கூடும் என்பதால் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிடவும், அந்தத் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிற்சங்கத்தினர் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தனர்.