மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் இராணுவ கட்டளை தளபதியுடன் விசேட சந்திப்பு (Photo)
மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பாக மன்னார் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன விஜயசேகரவுடன் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் நேற்று மாலை விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
"மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மன்னார் தள்ளாடி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன விஜய சேகரவை தள்ளாடியில் சந்தித்துப் பல விடயங்களை எடுத்துக் கூறினோம்.
மன்னார் மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் 16 சோதனைச்சாவடிகள் போதைப்பொருள் தடுப்பு எனும் போர்வையில் மக்களை அடக்குமுறைக்குப்படுத்துகின்றன. இவற்றை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் தீர்வின்றி தொடர்கின்றன. அரச உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எந்த தடையும் இன்றி பயணிப்பதால் சாமானிய மக்களின் அவலநிலை புரிவதில்லை.
போதைப்பொருள் தடுப்பு எனும் காரணத்தை வைத்து மன்னார் நுழைவாயில் உள்ள சோதனைச் சாவடி சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்வியல் செயற்பாட்டில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அரச தனியார் பணியாளர்கள் குறித்த நேரத்திற்குக் கடமைக்குச் செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுவதுடன், பொருட்கள் இறக்கி ஏற்றுவதால் செலவு அதிகரிப்பதுடன் நேர விரயமும் ஏற்படுகிறது.
பயணிகளைச் சோதனையில் ஈடுபடும் இராணுவத்தினர் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாகத் தெரிவித்ததுடன் மோட்டார் சைக்கிளின் பக்க கதவுகள் தினமும் கழட்டுவதால் பழுதடைந்து விடுகின்றன. அதற்கமைவாக மன்னார் நுழைவாயில் சோதனைச்சாவடி பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் உள்ளதால் என்னால் அகற்ற முடியாது.
ஆனால் தங்கள் வேண்டுகைக்கு அமைவாக நுழைவாயில் சோதனைச்சாவடியில் சாதாரண பயணிகள் போக்குவரவை இலகுபடுத்துவதுடன் அடையாள அட்டை பரிசோதனையை நிறுத்தப்படும். மேலும் பொருட்கள் இறக்கி ஏற்றுவதற்கு மாற்று வழிகள் மேற்கொள்வதுடன், காலையில் வேலைக்குச் செல்லும் அரச தனியார் பணியாளர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் பேசக்கூடிய இராணுவத்தினரை அதிகம் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபடுத்துவதாகவும் மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்ததுடன் இவ் இலகுபடுத்தல் நடைமுறையைக் கவனிக்குமாறு அதன் முன்னேற்றம் தொடர்பாக அடுத்த மாதமும் கலந்துரையாடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்."
இச்சந்திப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் அடிகளார்,
மன்னார் பிரஜைகள் குழுவின் செயலாளர் பத்திநாதன் உட்பட சில பொது
அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
