வீடு ஒன்றின் குளியல் அறையில் இருந்து அரிய வகை கடலாமைகள் மீட்பு (Photos)
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளே இவ்வாறு நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மீட்கப்பட்ட ஆமைகள் அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்தவை என்பதுடன், ஒவ்வொரு ஆமையும் சுமார் 100 கிலோகிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கடலாமைகள் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கடலில் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த வீட்டில் சந்தேகநபர்கள் எவரும் இருக்கவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
