மன்னாரில் மாணவர்களை கடத்த முயற்சிக்கும் மர்ம கும்பல் - தீவிர பாதுகாப்பில் பொலிஸ்
மன்னாரில் பாடசாலைகளை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த ஒரு கும்பல் முயற்சிப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாடசாலைகளுக்கு எதிரிலும் அதனை அண்டிய வீதிகளிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் வேன் ஒன்றில் சென்ற கும்பலொன்று உணவுப் பண்டமொன்றை வழங்கி இரண்டு மாணவர்களை கடத்திச் செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்கள் கடத்தல்காரர்களிடமிருந்து மீண்டு கூச்சலிட்டதாகவும் இதனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தின் பாடசாலைகள் மற்றும் அதனை அண்டிய வீதிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனியாக வீதியில் செல்ல வேண்டாம் எனவும் கூட்டமாக சேர்ந்து செல்லுமாறும் மாணவர்களுக்கு அதிபர்களும் ஆசிரியர்களும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam